கோவை: இளையராஜா இசை நிகழ்ச்சியில் அண்ணாமலை உரையால் விவாதம்

கோவையில் நடைபெற்ற இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சியில் நேற்று பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மேடையில் உரையாற்றினார். நிகழ்ச்சியில் இளையராஜாவின் காலில் விழுந்து வணங்கிய அண்ணாமலை, அவருக்கு பொன்னாடை போர்த்தினார். உரையின்போது, இளையராஜாவை இசை கடவுள் என புகழ்ந்த அவர், அவரின் சாதனைகளை எடுத்துரைத்தார்.

 மேலும், மோடி ஐயா, கலைஞர் ஐயா, ஸ்டாலின் ஐயா ஆகியோர் அனைவரும் இசைஞானியின் மீது அன்பு காட்டும் விதத்தை வெளிப்படுத்தினார். அண்ணாமலை, கருணாநிதி மற்றும் ஸ்டாலின் பெயர்களை ஐயா என மரியாதையுடன் குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் அதிமுக மற்றும் பாஜகவினரிடையே விவாதத்தை உருவாக்கியுள்ளது. இந்த உரை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி