கோவை: பூனையுடன் கிணற்றில் சிக்கித் தவித்த முதியவர்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (69) என்பவர், தனது வீட்டருகேயுள்ள 250 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பூனை ஒன்றை மீட்க முயன்றார். இதற்காக அவர் நேரடியாக கிணற்றுக்குள் இறங்கிய நிலையில், மீண்டும் மேலே ஏற முடியாமல் சிக்கித் தவித்தார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் இன்று தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். தகவல் அறிந்ததும், கருமத்தம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செயல்பட்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கயிறுகளை பயன்படுத்தி சுமார் 250 அடி ஆழத்திலிருந்து முதியவரையும், பூனையையும் உயிருடன் மீட்டனர்.

தொடர்புடைய செய்தி