கோவை: திரைத்துறைக்கு செல்லும் போது அட்ஜெட்மெண்ட் பிரச்சனை!

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் வோக் மாடலிங் நிறுவனம் சார்பில் ஆணழகன் போட்டி இன்று நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று கேஷுவல், ஸ்விம் வேர், டிரடிஷனல், பிஸினஸ் மற்றும் கேள்வி-பதில் சுற்றுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு ஆணழகன் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஷில்பா, மாடலிங் துறையில் இருந்து திரைத்துறைக்கு செல்லும் போது அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் உள்ளதாக கூறி, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி