கோவை: ரயில்நிலையத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை போத்தனூர் ரயில்நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், இன்று சந்தேகத்திற்கு இடமான வகையில் கிடந்த பையை சோதனை செய்தனர். திருச்சி – மங்கலூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பயணிகள் பெட்டியில் இருந்த அந்த பையில், 5 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின், அந்த பையை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சாவை யார் வைத்தது? எதற்காக, எங்கு எடுத்துச்செல்லப்பட்டு இருந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி