கோவை: ஆட்டோவில் செல்போன், பணம் திருடிய 2 பேர் கைது

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தினேஷின் ஆட்டோவில் இருந்து ரூ. 5,000 மற்றும் செல்போன் திருடப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றது. தினேஷின் அறிமுகமான சந்துரு என்பவர், தனது நண்பர்களுடன் மதுக்கடைக்கு செல்லவதாகக் கூறி ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். 

பின்னர் பணம் மற்றும் செல்போன் காணாமல் போனதைத் தொடர்ந்து, ராமநாதபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் சந்துரு மற்றும் லியோ ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவான தரணி என்பவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி