கோவை: கல்லூரி பேராசிரியை வீட்டில் 18 பவுன் நகை திருட்டு

துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் வசிக்கும் தனியார் பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியை பிரியதர்ஷினி வீட்டில் நேற்று 18 பவுன் தங்க நகைகள் திருட்டுப் போனது. அவரது தந்தை உடல்நலக் குறைவால் உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், வீட்டிற்கு வந்த அவரது மாமா புனிதகுமார் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகைகள் திருடப்பட்டதைக் கண்டுபிடித்தார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி