ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு மீண்டும் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று மற்றும் இன்று நடைபெற்ற இந்தத் தேர்வில், கோவை மாவட்டத்தில் மொத்தம் 16,260 பேர் பங்கேற்றனர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் தகுதிக்கான தாள்-1 தேர்வு நேற்று 15 மையங்களில் 3,890 பேர் எழுதினர். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தகுதிக்கான தாள்-2 தேர்வு இன்று 45 மையங்களில் நடைபெற உள்ளது. இதற்காக 12,370 பேர் பதிவு செய்துள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு, தூய்மை மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன.