இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் கடையில் வேலை செய்யும் ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது, கேஷியர் பாபு அடிக்கடி கேஷ் பெட்டியில் இருந்து பணம் எடுப்பதை பார்த்ததாகவும், அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஓட்டல் நிர்வாகத்தினர் பாபுவை அழைத்து விசாரித்த போது, அவர் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்துள்ளார். இதனால் ஓட்டல் உரிமையாளர் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஜாபர் சாதீக் (36) காட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாபுவிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் தான் பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.