மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையை கடந்த பாகுபலி யானை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் சுற்றித்திரியும் பாகுபலி என்ற காட்டு யானை, நேற்று கல்லார் வனப்பகுதியில் இருந்து வெளியேறி மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையோரத்தில் நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி வாகனங்களை நிறுத்தினர். அப்பகுதி மக்கள் பாகுபலி யானையை 'போயிரு' என செல்லமாக அழைப்பதாக கூறப்படுகிறது. சுமார் அரை மணி நேரம் சாலையில் நின்ற யானை, பின்னர் சாலையை கடந்து குடியிருப்பு பகுதி வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

தொடர்புடைய செய்தி