கோவையில் 78 கிலோ குட்கா பறிமுதல்.. வாலிபர் கைது

கோவையில் புகையிலைப்பொருட்கள் (குட்கா) விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதேபோல், நேற்று உக்கடம் போலீசார் இஸ்மாயில் தெருவில் உள்ள ஒரு பள்ளி அருகே கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு புகையிலைப்பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கிருந்த 78 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தனர். விற்பனையில் ஈடுபட்ட ஆர். எஸ். புரத்தை சேர்ந்த தினேஷ்குமார்(27) என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி