கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் பீமல் அதக் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார்.
இவர் கடையில் ஊழியராக பிஸ்வந்த் கர்ல், பிலாஸ் பிரமாணிக், சுப்ரமதிடிக்கர் ஆகியோர் ஊழியராக வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடையில் இருந்த 265 கிராம் (33 பவுன்) எடையிலான சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கட்டியை ஆபரணம் தயாரிக்க பீமல் அதக் 3 பேரிடமும் கொடுத்திருந்தார்.
3 பேரும் தங்க கட்டியை ஆபரணம் தயாரிக்கும் கடையில் தரவில்லை. மாறாக தங்க கட்டியுடன் 3 பேரும் வெளியே சென்றுவிட்டனர். பிறகு இவர்கள் வரவில்லை. 3 பேரின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
தங்க கட்டியை இவர்கள் எடுத்து தப்பிவிட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.