விழாவில் பேசிய எஸ்பி கார்த்திகேயன், காவலர் செயலியை அனைத்து மகளிரும் பயன்படுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். மேலும், காவலர் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி கார்த்திகேயன், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிரும் காவலர் செயலியை பயன்படுத்த வேண்டும் என்பது காவல்துறையின் அன்பான வேண்டுகோள். இந்த செயலியின் மூலம் குற்றங்கள் பெருமளவில் தடுக்கப்படும் என்றார்.
யுனெஸ்கோ மாநாடு.. 1400 பிரதிநிதிகள் பங்கேற்பு