இந்த அலுவலகத்திற்கு தினமும் பல்வேறு அரசு அலுவல் பணிகளுக்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தை கண்டு அச்சமடைந்துள்ளனர். இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள கட்டிடத்திற்கு பயத்துடன் வந்து செல்கிறோம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை மாற்றி புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.