துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயத்தால் ரத்தக்குழாய் பாதிப்பு ஏற்பட்டு ஆசார் அலியின் கால் அழுகத் தொடங்கியது. இதனால் அவரது வலது கால் அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இன்று மாலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவின் திருச்சூரில் மூன்று ஏடிஎம்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் தொடர்புடையது. கொள்ளையர்கள் சுமார் 66 லட்சம் ரூபாயை கன்டெய்னர் லாரியில் கடத்திச் சென்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் லாரியை சோதனையிட்டபோது, கொள்ளையர்கள் தப்பிக்க முயன்றனர். இதில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர், ஒருவர் தப்பியோடினார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஆசார் அலி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் உதவி ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.