கோவை: திருவிழாவில் வாலிபர் குத்தப்பட்ட சம்பவம் - இருவர் கைது

ஆனைமலை பகுதியில் நடைபெற்ற மாசாணி அம்மன் குண்டம் திருவிழாவின் போது, முன்விரோதம் காரணமாக சந்தானகிருஷ்ணன் என்பவர் ராஜா என்பவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜா பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆனைமலை போலீசார், சந்தானகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் செல்வகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி