கோவை குனியமுத்தூர் பகுதியில் வாகன சோதனையின் போது சொகுசு காரில் உயர்தர போதைப் பொருள் கடத்திய கேரள வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். சுகுணாபுரம் சோதனைச் சாவடி அருகே நடந்த சோதனையில், காரிலிருந்து 90 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஹஸ்னுல் ரகுமான் என்பதும், போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பல வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.