கோவை: பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

கோவை போத்தனூர் கார்மல் நகரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மனைவி சத்தியகலா (42). இவர்களது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜபிரகாஷ் (29) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜபிரகாஷ், சத்தியகலாவின் வீட்டின் அருகில் நின்றிருந்தார். அதனை பார்த்த சத்தியகலாவின் தந்தை, அவரிடம் சென்று எதற்காக இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜபிரகாஷ் தகாத வார்த்தைகளால் திட்டி சத்தியகலாவை தாக்கி மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். இதுகுறித்து சத்தியகலா சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபிரகாஷை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி