கோவை: பெண்மணியை கட்டி வைத்து 10 பவுன் நகை கொள்ளை

கோவை அருகே சூலூர் சுகந்தி நகரில் நேற்று வீட்டில் தனியாக இருந்த பெண்மணியை கட்டிப்போட்டு மர்மநபர்கள் 10 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்தா அணிந்த இரு பெண்களும், தொப்பியுடன் வந்த ஆணும் வீட்டிற்குள் நுழைந்து, பெண்மணியை கட்டிப்போட்டு அச்சுறுத்தி, அலமாரியில் இருந்த சுமார் 10 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். சூலூர் காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி