கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரே இன்று திடீரென குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் குடிநீர் பெருமளவில் வீணாக ஓடியது. தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து, பணியாளர்களுக்கு பழுதுபார்க்க உத்தரவிட்டனர். பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி, உடைந்த குழாயை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.