கோவை: மத்திய அரசை வேல்முருகன் கடுமையாக விமர்சனம்

கோவை சுங்கம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் முன்னிலையில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய இளைஞர்கள் மற்றும் பெண்கள் அக்கட்சியில் இணைந்தனர்.  செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. AIIMS, மெட்ரோ, ரயில்வே திட்டங்கள் முன்னேற்றமின்றி உள்ளதாகவும் விமர்சித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் உரிய தீர்ப்பு வழங்குவார்கள். சாதி–மத அரசியல் எடுபடாது என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்தி