கோவையில் உள்ளாடை திருட்டு... சிசிடிவி வைரல்

கோவை அருகே கண்ணம்பாளையத்தில், வீடுகளில் உலர வைக்கப்பட்டிருந்த உள்ளாடை உள்ளிட்ட துணிகள் மர்ம நபர் ஒருவரால் திருடப்படுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்ந்து உள்ளாடைகள் காணாமல் போவதை தொடர்ந்த பொதுமக்கள் புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டதில் ஒருவர் வீடுகளுக்கு நுழைந்து துணிகளை திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இது தற்போது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. 

சூலூர் போலீசார் இது குறித்து நேற்று வழக்குப் பதிவு செய்து, காட்சிகளில் உள்ள நபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி