கோவை: கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது; 20 லிட்டர் பறிமுதல்

கோவை அடுத்த கருமத்தம்பட்டி அருகே சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சியதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு, வடுகபாளையத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் செங்காளியப்பன் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 லிட்டர் கள்ளச்சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி