சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில், மகளிர் தினத்தை ஒட்டி கல்லூரி மாணவிகள் மட்டும் பங்கு பெற்ற கண்டுபிடிப்பு கண்காட்சி என்ற தொழில்நுட்ப வடிவமைப்பு போட்டி நேற்று நடைபெற்றது. இதில், கல்லூரியின் மாணவிகள் பூஜா, விசாலினி, பிரியங்கா ஆகியோர் இணைந்து சென்சார் தொழில்நுட்பத்துடன் கூடிய ஹெல்மெட் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளனர். இந்த ஹெல்மெட் குறித்து மாணவிகள் கூறுகையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் இந்த ஹெல்மெட்டை வடிவமைத்துள்ளோம்.
இது, மது அருந்தியிருந்தால் வாகனத்தை இயக்க முடியாதபடி, சென்சார் தொழில்நுட்பத்துடன் இயங்கும் என்று தெரிவித்தனர். இந்த கண்டுபிடிப்பு, சாலை விபத்துக்களை குறைக்க உதவும் என்று கல்லூரி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.