தங்களது பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு, குடும்ப எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக குடியிருக்க போதுமான இடமில்லை என்றும், சொந்தமாக வீடு வாங்கும் வசதி இல்லாத நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த ஆறு ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கள் அளித்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
தமிழக முதலமைச்சர், அரசு துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என பலரிடமும் மனுக்கள் கொடுத்தும் பலனில்லை என்றும், தரிசு நிலங்கள் மற்றும் பஞ்சமி நிலங்கள் இருந்தும் அவற்றை மீட்டு பட்டா வழங்க அதிகாரிகள் முன்வரவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.