சூலூரில் விஸ்வஹிந்து பரிஷத் தமிழ்நாடு சூலூர் ஒன்றியம் சார்பில், சட்டசபையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானம் குறித்து பேசியது இந்து மதத்தை இழிவுபடுத்துவதாகக் குற்றம்சாட்டி, அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மனு அனுப்பப்பட்டது. சபாநாயகர் மற்றும் முதலமைச்சர் கண்டிக்காதது வருத்தமளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மாநில இணை பொது செயலாளர் விஜயகுமார் தலைமையில், கணேஷ், சபரி உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த மனுவை நேற்று (மே 16) அனுப்பினர்.