கோவை: 30 ஆண்டுகளாக சாக்கடை வசதி இன்றி அவதி

கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சிக்குட்பட்ட அம்மன் நகர் பகுதியில் 30 ஆண்டுகளாக சாக்கடை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கழிவுநீர் தேங்கி குழந்தைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவதாகவும், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பேரூராட்சி தலைவர் சந்திரன் (திமுக) மீது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என மக்கள் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி