பரதநாட்டியப் போட்டியில் வென்ற கோவை மாணவிகளுக்கு வரவேற்பு

இலங்கையின் கொழும்புவில் நடைபெற்ற சர்வதேச பரதநாட்டியப் போட்டியில் கோவையைச் சேர்ந்த ரெங்காஸ் கல்ச்சுரல் அகாடமியின் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்று நேற்று கோவை திரும்பினர். கோவை ரயில் நிலையத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்களை வரவேற்றனர். அகாடமி நிறுவனர் சுபா வசந்த், இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றதாகவும், பரதநாட்டியத்தை வெளிநாடுகளில் பரப்பியது பெருமை அளிப்பதாகவும், சர்வதேச அனுபவம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி