கோவை மாவட்டத்தில் மட்டும் 5.30 லட்சம் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கல்வியாண்டு நிறைவுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளதால், மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து வர வேண்டும் என கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுமுறை நீட்டிக்கப்படும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இன்று பள்ளி திறக்கப்பட்டதால் சக மாணவர்களுடன் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர்.