வரவிருக்கும் தேர்தலில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் சூலூர் வடக்கு ஒன்றியத்தின் குரும்பம்பாளையத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தினர் நேற்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இவ்விழாவில் அவர்கள் தேவிக்கு மாலை அணிந்து விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தமிழக வெற்றிக் கழகத்தினரின் இந்த நிகழ்வு சூலூர் பகுதியில் பெரும் கவனம் பெற்றது.