கோவை ரயில் நிலையத்தில் கொல்கத்தாவிலிருந்து கேரளாவுக்குச் சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய கேரளாவைச் சேர்ந்த அமுல் (27) மற்றும் விஷ்ணு (34) ஆகியோரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், செல்வபுரம் மற்றும் கோவைப்புதூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த சூர்ய பிரகாஷ் (25), கார்த்திகை செல்வம் (26), பாசில் (28) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மொத்தம் 6.8 கிலோ கஞ்சா மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.