சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை கண்டித்து கோவை சிவானந்தா காலனியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கம்யூனிஸ்ட், இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். SIR திட்டம் மூலம் மத்திய பாஜக அரசு அடக்குமுறையை முன்னெடுத்து, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை மாற்ற முயற்சிப்பதாக செந்தில்பாலாஜி குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையம் பாஜகவின் கையில் செயல்படுவதாகவும், 2026 தேர்தலில் பாஜக-அதிமுக வெற்றிபெறக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கிய வளர்ச்சி திட்டங்களை முன்னிறுத்தி, அனைவரும் ஒன்றுபட்டு SIR-ஐ முறியடிக்க வேண்டும் என்றும் செந்தில்பாலாஜி வலியுறுத்தினார்.