கோவை: சோதனைச் சாவடியில் 30 இலட்சம் ரூபாய் பறிமுதல்

கோவை–பாலக்காடு சாலை எட்டிமடை சிறப்பு சோதனைச் சாவடியில் நேற்று, வழக்கமான சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 30 இலட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பாலக்காட்டைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், சூர்யா குரூப்ஸ் நிறுவனத்திலிருந்து KMS Engineering நிறுவனத்திற்கு கட்டுமானப் பொருட்கள் கொள்முதல் தொடர்பாக இந்தப் பணத்தை எடுத்துச் சென்றதாகத் தெரிவித்தார். ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லாததால், பணமும் அவரும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் எட்டிமடை சாவடி போலீசாரால் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி