கோவை: சாலையோர வியாபாரிகள் மண்டியிட்டு மனு!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் இன்று மண்டியிட்டு மனு அளித்தனர். தங்களுக்கான நலத்திட்டங்கள், வியாபார குழு அமைத்தல், தள்ளுவண்டிகள் மற்றும் அரசு இடங்களில் கடைகள் ஒதுக்குதல் போன்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தினர். அரசு அறிவித்த திட்டங்கள் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்றும், தேர்தலுக்குப் பிறகு வழங்கப்படும் என கூறிய உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் சங்கத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி