கோவை: கோவையிலிருந்து பார்சிலோனா சென்ற தனியார் ஜெட் விமானம்

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், பூனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், ஷர்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை 6. 24 மணி அளவில் ஒரு தனியார் ஜெட் விமானம் துபாய் விமான நிலையத்தில் இருந்து, ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகருக்கு கிளம்பியது. 

இதன் இடையே அந்த விமானம் காலை 11. 21 மணி அளவில் கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. சிறிது நேர ஓய்விற்கு பின்னர் அந்த விமானம் 12. 46 மணி அளவில் பார்சிலோனா கிளம்பி சென்றது. இதுபோல வெளிநாடுகளுக்கு செல்லும் தனியார் ஜெட் விமானங்கள் அடிக்கடி கோவை விமான நிலையத்திற்கு வந்து செல்வது வழக்கம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்தி