கோவை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்; நாளை மின்தடை

கோவை, அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை ( ஆகஸ்ட் 1) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் கோவிந்தராஜூ இன்று அறிவித்துள்ளார். 

அதன்படி, அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன்புதூர், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்புநகர், அன்னூர் சாலை, பொன்னாண்டம்பாளையம், மோளபாளையம் உள்ளிட்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது. 

பொதுமக்கள் இதை முன்கூட்டியே அறிந்து தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி