கோவை: கோழி வளர்ப்பு தொழில்நுட்ப மாநாடு!

கோவை மாவட்டம் சூலூர், கண்ணம்பாளையத்தில் நேற்று நடைபெற்ற கோழிப்பண்ணை தொழில்நுட்ப மாநாட்டில், இறந்த கோழிகள் மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்ய ரெண்டரிங் பிளான்ட் அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. கோவை, திருப்பூர் பகுதிகளில் அதிக கோழி உற்பத்தி நடப்பதால், அங்கு இதை அமைத்தால் மறுசுழற்சி எளிதாகும் என வலியுறுத்தப்பட்டது. மாநாட்டில், பிராய்லர் கோழி சத்தான உணவு என உறுதிமொழி ஏற்கப்பட்டது. பண்ணை கோழி ஒழுங்குமுறை குழு மேலாளர் ராம்ஜி, பிராய்லர் கறிக்கோழி குறைந்த விலையில் சிறந்த புரோட்டீன் உணவு என்றும், அதை உட்கொள்வதால் எந்த தீங்கும் இல்லை என்றும் தெரிவித்தார். தனிநபர் கறிக்கோழி நுகர்வு 4 கிலோவிலிருந்து 10 கிலோவாக உயர்ந்துள்ளதாகவும், இதனால் மக்காச்சோளம் விளைச்சல் அதிகரித்து விவசாயிகள் பயனடைவதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி