கோவை: மலை அடிவாரத்தில் பிளாஸ்டிக் விற்பனை: கடைக்கு சீல்

கோவை அருகே தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சிவராத்திரி மற்றும் மே மாதம் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறும் நிலையில், அடிவாரப் பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் இணைந்து கண்காணிப்பு மேற்கொண்டன. எச்சரிக்கை விடுத்தும் ஒரு கடை பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதால், திடீர் சோதனையில் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டு, அந்தக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மலைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் வனவிலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து என்பதால், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி