கோவை அரசூர் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு வாகனங்களை அறிமுகம் செய்து வைத்து மின்சார வாகனத்தின் முக்கிய பயன்கள் குறித்து பேசினார்.
அவர் அறிமுகம் செய்து வைத்த வாகனம், 34 ஆயிரத்திலிருந்து 84 ஆயிரம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்தும் விதமாக 295 கிலோ வரை எடையை எடுத்துச்செல்லலாம். அதேபோல் பேட்டரி பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை இந்த வாகனத்தில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.