கோவை புலியகுளம் அருகே வெள்ளிக்கிழமை காலை தனியார் நிறுவன ஊழியர் அக்சய் குமார் (24) பஸ் மோதி உயிரிழந்தார். தர்மபுரியைச் சேர்ந்த இவர், கோவை ராமநாதபுரத்தில் தங்கி காளப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே வந்த பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.