சூலூர் அருகே 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தை அடுத்து, சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அமைச்சர் சம்பத்குமார், மாவட்ட கலெக்டர் பவன்குமார், சூலூர் எம்எல்ஏ சுகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் விசாரணை நிலவரம் குறித்து கேட்டறிந்து, விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.