மேலும், அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் சசிகுமார் பேசுகையில், தமிழகத்தில் பெருகி வரும் மணல் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்த அரசு உடனடியாக ஒரு கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும். இந்த குழுவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்னெடுக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுக்கும் அரசின் எந்தவொரு முயற்சிக்கும் எங்களது சங்கம் முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.
பாஜக-அதிமுக கூட்டணி.. அவர்களிடம் தான் கேட்க வேண்டும்: இபிஎஸ்