கோவை, பேரூர் சுற்றுவட்டாரப் பகுதியில் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரின் பேரில், பேரூர் போலீசார் நேற்று மத்திப்பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர். திருமண மண்டபம் அருகே டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி அதிக விலைக்கு விற்றதாக வெள்ளிங்கிரி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.