இதேபோல், மதுக்கரை அடுத்த திருமலையம்பாளையம் அருகே குமட்டிபதி பகுதியில் சிறுத்தை ஒன்று ஆட்டை கடித்து குதறியுள்ளது. அடுத்தடுத்து சிறுத்தை நடமாட்டம் அதிகரித்திருப்பதால், இந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் அதிகரித்திருப்பதால், மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியே வர தயங்குகின்றனர். எனவே, வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து, சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து, மக்கள் அச்சமின்றி வாழ வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி