கோவை: கமல்ஹாசன் பிறந்த நாள் நலத்திட்ட வழங்கும் விழா

கோவை சங்கனூர் பகுதியில், மக்கள் நீதி மய்யம் ஆதி திராவிடர் நல அணி சார்பில் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஆதி திராவிடர் நல அணி மாநில செயலாளர் சிட்கோ சிவா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மண்டல அமைப்பாளர் தம்புராஜ், மாநில துணைத் தலைவர் மெளரியா, தங்கவேலு, இளைஞர் அணி மாநில செயலாளர் சிநேகன், தலைமை நிலைய செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாவட்ட அமைப்பாளர் நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி