கோவை: ஜூனியர் தேசிய குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025!

ஜூனியர் தேசிய குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், கோவை ஸ்டேபிள்ஸ் குதிரை சவாரி பள்ளியைச் சேர்ந்த எட்டு இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி 5 தங்கம், 3 வெண்கலம் மற்றும் 5 நான்காம் இடங்களை வென்று கோவைக்கு பெருமை சேர்த்தனர். 2025 ஆம் ஆண்டில் மட்டும் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் 48 தங்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றுள்ள கோவை ஸ்டேபிள்ஸ், நாட்டின் முன்னணி குதிரை சவாரி பயிற்சி மையமாக திகழ்கிறது. பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல் மற்றும் பெற்றோரின் ஆதரவே இந்த வெற்றிக்கு காரணம் என நிர்வாகம் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தது.

தொடர்புடைய செய்தி