தேங்காய் கொப்பரை விலை நிலைத்திருக்காமல் ஒரு வாரம் உயர்ந்து, மறுநாளே குறைகிறது. இதற்குக் காரணமாக இறக்குமதி எண்ணெய்களுக்கு அளவில்லாத மானியம் வழங்கப்படுவது தான் என அவர் குற்றம் சாட்டினார். ரூ. 35-க்கு இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு மானியம் வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும், உள்ளூர் விவசாயிகள் நிலைமையை பாதுகாக்க இறக்குமதி வரியை உயர்த்தி, சர்வதேச விலைக்கு சமமாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
திமுக அரசு, தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி விவசாயிகளுக்கு கட்டுப்படியாகக்கூடிய விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும், விவசாய சங்கங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் கோரினார். விவசாய உற்பத்தி குறைந்துவரும் நிலையில் உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது என அவர் எச்சரிக்கை விடுத்தார்.