கோவை: மயான கொள்ளை பூஜை

கோவை சொக்கம்புதூர் பகுதியில் மகா சிவராத்திரி மற்றும் மாசி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற மயான கொள்ளை பூஜையில் நேற்று நள்ளிரவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சுடுகாட்டில் மண்ணால் உருவாக்கப்பட்ட மாசாணியம்மன் சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர், சிலையின் இருதய பகுதியில் வைக்கப்பட்டிருந்த மனித எலும்பை வாயில் கடித்தபடி ஆக்ரோசமாக நடனமாடிய நிகழ்வு பக்தர்களை பரவசமடையச் செய்தது.

தொடர்புடைய செய்தி