கோவை மாவட்டம் சூலூர் அருகே மோப்பிரிபாளையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று பேசினார். தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் என்றும், ஆட்சிக்கு வந்தவுடன் கோவை மெட்ரோ ரயில் திட்டம் விரைவாக செயல்படுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதற்காக பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.