கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் அரசு மற்றும் தனியார் நகரப் பேருந்துகள் இடையே ஏற்பட்ட வேகப் போட்டி காரணமாக நேற்று விபத்து ஏற்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பேருந்தை முந்த முயன்ற தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். நேரம் மற்றும் பயணிகள் ஏற்றத்தில் போட்டி நிலவுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.