இதில் ராபர்ட் கிளைவ் சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்ததும் அவருடன் சிறுமி இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். இதுதொடர்பாக ராபர்ட் கிளைவை பிடித்து விசாரித்தனர். இதில் திருமணமாகாத அவர் சிறுமியை ஆசைவார்த்தைகள் கூறி கடத்திச்சென்று உள்ளார். பின்னர் சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதைஅடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து ராபர்ட் கிளைவை போலீசார் நேற்று கைது செய்தனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். மேலும் சிறுமிக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?